சனி, 1 பிப்ரவரி, 2014

கூடங்குளம் அணு மின் நிலையமா? டீசல் மின் நிலையமா?


கூடங்குளம் அணு மின் நிலையமா? டீசல் மின் நிலையமா?

சாமி! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

கூடங்குளத்தில் இருப்பது உண்மையில் அணுமின் உற்பத்தி நிலையம் தானா? அல்லது டீசல் மின் உற்பத்தி நிலையமா?

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குள்,காலை முதல் மாலை வரை டீசல் வாகனங்கள் நாள் தொடர்ந்து போய் வந்த வண்ணமே இருக்கின்றன! எதற்கு ஒரு அணுமின் நிலையத்துக்கு,இந்த அளவு டீசல் தேவை என்று போராட்டக்காரர்கள்,கடந்த ஆண்டில் பல முறை கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால் அந்த கேள்விகளை எல்லாம் அரசு கண்டுகொள்ளாமல் அவர்களை அலட்சியமாக பார்த்தது.இதோ அணு உலை மின்சாரம் வந்து விட்டது, இதோ திறந்து விட்டோம் உலகின் மிகச் சிறந்த கூடங்குளம் அணு உலையை என்றெல்லாம்,அரசு சார்பில் பொய்யும் போலிப் பித்தலாட்டங்களும் செய்து கொண்டிருந்த போது, போராட்டக்காரர்கள் மட்டும் உறுதியாகச் சொன்னார்கள்,அணு மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டு,இந்த கேடிக் கூட்டம் டீசல் மின்சாரம் தான் தயாரிப்பார்களாக இருக்கும் என்றார்கள்.

ஆக இன்றைய நடைமுறை சூழலை வைத்துப் பார்த்தால்,போராட்டக்காரர்கள் கடந்த ஆண்டு சொன்னது தான் உண்மை என்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது! எப்படி?

தகவல் அறியும் உரிமை சட்டத்தில்,அண்ணன் உதயகுமார் அவர்கள், கடந்த ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு வாங்கப்பட்ட டீசல் எவ்வளவு என்று கேட்டதற்கு, இருபத்து ஆறு(26) கோடி ரூபாய்க்கு டீசல் வாங்கி இருக்கிறார்களாம்.அதாவது சுமார் ஐம்பது லட்சம் லிட்டர் டீசல் என்றால் நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அணு உலைக்கு எதற்கு ஐம்பது லட்சம் லிட்டர் டீசல்? மின் பொறியியல் மற்றும் மின்சார உற்பத்தி முறைகள் பற்றி நன்கு தெரிந்த நண்பர்கள், அறிவார்ந்த பெருமக்கள் சிந்தித்து பாருங்கள்!

அணு உலைக்கு யுரேனியம் தான் மூல எரிபொருள் எனும் போது, ஐம்பது லட்சம் லிட்டர் டீசல் எதற்கு? ஒருவேளை யுரேனியத்தையும்,டீசலையும் கலந்து எரிபொருளாக்கி அணுப்பிளவை செய்யும் புதிய தொழில் நுட்பத்தை, கூடங்குளம் அணு உலை இயக்குனர் சுந்தரோ அல்லது இந்திய அணு விஞ்ஞானிகளோ கண்டு பிடித்தாலும் கண்டு பிடித்து இருக்கலாம்.ஒருவேளை இதற்காக நாளையே வளாக இயக்குனர் சுந்தருக்கு,மிகச் சிறந்த விஞ்ஞானி விருது வழங்கப்பட்டாலும் வழங்கப்படலாம்! யாரறிவார்?

அதெப்படி அணு உலை மின் நிலையம் என்று திட்டமிட்டு கட்டிய பிறகு, அதை டீசல் கொண்டு இயக்க முடியும் என்று அறிவார்ந்த கேள்விகள் வைக்கப்படுமானால்,மின் நிலையங்கள் எப்படி செயல்படுகிறது,மின் நிலையங்களில் இருந்து எப்படி மின்உற்பத்தி நடக்கிறது என்ற அடிப்படை தகவல்கள் தெரிந்த பொறியாளர்கள், அறிவியலாளர்களுக்கு நன்கு தெரியும்,அதாவது மின் நிலையங்களின் எரிபொருளை மாற்றி இயக்க இயலும் என்பது!ஆக ஏற்கனவே கட்டப்பட்ட ஒரு அணு மின் நிலையத்தை, டீசல் மின் நிலையமாக மாற்றி பயன்படுத்த இயலும்!அதில் எந்த சிக்கலும் இல்லை.

நேற்றைய சன் தொலைகாட்சி விவாதத்தில்,ஏன் இருபத்து ஆறு கோடிக்கு கடந்த ஆண்டு டீசல் வாங்கி இருக்கிறீர்கள் என்று அண்ணன் உதயகுமார் கேள்வி கேட்டால் ,காங்கிரஸ் கோமாளி கோபண்ணாவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.பதில் இருந்தால் தானே சொல்வதற்கு?

நிகழ்வில் பங்கு கொண்ட,இன்னொரு பாரதிய ஜனதா கோமாளி ராகவன்,அதெல்லாம் ரகசியம் என்றும், உங்களுக்கெல்லாம் அந்த காரணத்தை சொல்ல வேண்டியதில்லை என்றும் உளறுகிறான். இதுல என்ன ரகசியம் வேண்டிக் கிடக்கு? 


உங்களிடம் அணு உலை வரைபடத்தையா கேட்டார்கள் போராட்டக்காரர்கள்? அணு உலைக்கு எதுக்கு இவ்வளவு டீசல் தேவை என்று கேட்டதற்கு, பதில் சொல்வதில் என்ன ரகசியம்? பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. உண்மையான நிலவரத்தை மக்களிடம் சொல்லாத இந்த அரசுகள்,மொள்ளைமாறித் தனங்களை எல்லாம் மறைக்கின்றன. உண்மையில் கூடங்குளம் மின் நிலையம் என்பது டீசல் மின் நிலையமாக தான் செயல்படுகிறது என்பது எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாய் தெரிஞ்சு போச்சு! முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு? நமக்கு இந்த மாதியான கோமாளிகளை ஆட்சியாளர்களாக வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டிய காலக் கொடுமை!

கோபண்ணாவும்,ராகவனும் சிறிய உதாரணங்கள் தான்! இந்த கட்சிகளில் இருக்கும் ஆட்சியாளர்கள் எல்லாம்,இவர்களை விட பெரிய கோமாளிகளாகவே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. நாராயணசாமி:) இன்னொரு மிக சிறந்த உதாரணம்!

கூடங்குளம் டீசல் உலை  குறித்த இன்னும் சில கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் இல்லை!

நம்புங்க மக்களே நம்புங்க! கூடங்குளம் அணு உலையில் அணுவைப் பிளந்து தான் மின்சாரம் தயாரிக்கிறார்கள்.! யுரேனியத்தொடு,டீசலையும் சேர்த்து எரிக்கும் புதிய தொழில் நுட்பம் இந்திய விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டு கூடங்குளம் அணு(டீசல்) உலையில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்!

நல்லா வருவீங்கடா!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக