செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

அறுக்கப்பட்ட தூக்கு கயிறு!


அறுக்கப்பட்ட தூக்கு கயிறு! 

பிப்ரவரி 18 தமிழர்களின் பொன்னான நாள்!

மரண தண்டனை ஒழிப்பை நோக்கி இந்தியா நகரும் நகர்வாக,அதன் தொடக்கப் புள்ளியாக இந்த தீர்ப்பு அமையட்டும்!

தூக்கம் தொலைத்து வெகு நாட்களாகிப் போன, தாயார் அற்புதம்மாள் இனி வரும் இரவுகளிலாவது சற்றே நிம்மதியாக தூங்கட்டும்!

அதைப் போலவே அண்ணன் முருகன் மற்றும் சாந்தனின் உறவினர்களும் மரண பயத்தை விட்டு சற்றே நிம்மதியாக தூங்கட்டும்!

நீதிபதி அய்யா சதாசிவம் அவர்களின் ஓய்வுக்கு முன், இந்த தீர்ப்பு வந்து விடுமா வராதா என்று ஏங்கிய உள்ளங்கள் அனைத்தும் கொஞ்சம் இளைப்பாரட்டும்!

தமிழர்கள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் நபராக நீதிபதி அய்யா சதாசிவம் இருப்பார்கள்!

செங்கொடியின் தியாகம் எந்நாளும் போற்றப்படட்டும்!

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை முன்னெடுத்த அய்யா வைகோ மற்றும் ராம்ஜெத் மலானிக்கு தமிழினம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கும்!

வழக்கை முன்னெடுத்தது அய்யா வைகோவாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அதன் தோழர்கள் என அனைத்து தரப்பினரின் ஓங்கி ஒலித்த குரல்களும், போராட்டங்களின் கூட்டு முயற்சியே இந்த வெற்றி என்பதை மறந்து விட கூடாது!

தமிழினம் ஒன்று பட்டு நின்றால் இது மட்டுமல்ல, நம்மால் எல்லாமே சாத்தியம் தான்!

ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட தூக்கு தண்டனையை, கருணை கூர்ந்து விடுதலையாக மாற்ற தொடர்ந்து பாடுபடுவோம்!

மறுக்கப்பட்ட நீதியால்,தங்கள் வாழ்நாளின் இளமை முழுவதையும் சிறையில் கழித்து விட்ட அண்ணன்மார்கள், சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாள் வெகு சீக்கிரம் என்று உறுதியாக நம்புகிறோம்!

மனித நேயம் இந்த மண்ணில் தழைக்கட்டும்!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக