வியாழன், 3 ஏப்ரல், 2014

முன்னாள் டிஜிபி அய்யா நடராஜ்!


அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக இருந்த,முன்னாள் டிஜிபி அய்யா நடராஜ் அவர்களின் பணி சிறப்பாகவே இருந்தது!

தமிழக முன்னாள் டி.ஜி.பி அடிமைகள் திமுக வில் சேர்ந்தாரோ அல்லது வேறு எந்த கட்சியில் சேர்ந்தாரோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.

டிஜிபி நடராஜ் அவர்களின் காவல்துறை பணி ஓய்வுக்கு பின்னர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது!

ஒருவரின் பணி ஓய்வுக்குப் பின்னரும்,அவருக்கு அரசுப் பணியில் நீடிக்க வாய்ப்புண்டா என்றால் கட்டாயம் உண்டு. இந்தியாவிலும் சரி, இந்திய மாநிலங்களிலும் சரி, பணி ஓய்வு வயதைத் தாண்டிய பின்பும் கூட, பத்து பதினைந்து ஆண்டுகள் அரசுப் பணிகளில் தொடர்ந்து பணியாற்றும் பலரை நாம் அறிவோம்.

அரசாங்கத்தில் அதற்கான சிறப்பு வழிமுறைகள் இருக்கிறது!

உதாரணமாக மாநில அரசில் பணி மூப்பு வயது 58 என்றும், மத்திய அரசில் பணி மூப்பு வயது 60 என்றும் இருக்கின்ற இந்த நேரத்திலும்,அரசின் அனுமதி பெற்று அல்லது ஒப்புதலோடு. எழுபது வயது வரை அரசுப் பணியில், நம் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

ஆக நடராஜ் அவர்களின் பணி ஓய்வுக்கு பின்னர்,அவருக்கு வழங்கப்பட்ட அரசு பணியாளர் தேர்வு மையத்தின் தலைவர் பதவி என்பது விசித்திரமான அல்லது இது வரை எவருமே வகிக்காத பதவி ஒன்றும் அல்ல.

இந்த வாய்ப்பு எல்லோருக்கும் வழங்கப்படுகிறதா அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறதா? அப்படி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றால் ஏன் அவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது,அதில் இருக்கும் அரசியல் என்ன என்பதெல்லாம் கட்டாயம் விவாதத்துக்கு உட்பட்டது என்பதை மறுக்க இயலாது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியில் இருந்த, நடராஜ் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது, சிறப்பாக செயல்பட்டாரா என்றெல்லாம் விவாதித்தால்,
கட்டாயம் அவரது பணி மிக சிறப்பாகவே இருந்தது என்பதை எவரும் மறுக்க இயலாது.

அவர் தலைவராக வந்த பின்பு தான், தேர்வு முடிவுகள் ஒரு சில வாரங்களிலும்,அதற்கான விடைகள் இணையத்திலும்,தேர்வு முடிவுகள் வெளி வந்து ஒரு சில வாரங்களிலேயே நேர்காணல் நடத்தி,பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டன. இந்த பணிகள் எல்லாம் மிக மிக வேகமாக நடை பெற்றன என்பதை அரசு தேர்வுகள் எழுதும் பலரும் அறிவார்கள்.மிக முக்கியமாக அவர் கால கட்டத்தில், அனைத்து தேர்வு முறைகளிலும் ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தது.

அரசு தேர்வில் உள்ள பல விடயங்களை, சிக்கல்களை எளிதாக்கினார், உண்மையில் சொல்லப்போனால்,அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள் பலருக்கு, நடராஜ் அவர்கள் மீது கடுமையான கோபமும்,கடுப்பும் உண்டு என்பதை மறுக்க இயலாது. காரணம் தூங்கி வழியும் பல அரசு அதிகாரிகளை துரிதப் படுத்தி வேலை வாங்கினார்! அந்த வகையில் அவருக்கு எதிராக ஒரு குழுவே உருவாகியது என்பதை பலர் அறிவார்கள்.

ஒன்றும் வேண்டாம்.

நடராஜ் அவர்கள் தலைவராக இருந்த போது அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாட்டுக்கும், தற்போது புதிதாய் தலைவாராக் நியமிக்கப்பட்டு இருக்கும்,
ஜெயலலிதாவின் ஆசி பெற்ற, தமிழ்நாடு அரசு வழக்குரைஞராகவும், விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடையாணை வாங்க கடுமையாக முயற்சித்த வருமான,நகைச்சுவை நாயகன் வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன் அவர்களின் செயல்பாட்டுக்கும்,உள்ள வித்தியாசத்தையும், கடந்த சில வருடங்களாக அரசு தேர்வு எழுதி வரும் மாணவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.அவர்கள் சொல்வார்கள் நடராஜ் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு துரிதமாகவும், அருமையாகவும் இருந்ததென்று.

இன்னும் சொல்லப் போனால் நடராஜ் அவர்கள் வந்த பிறகு தான் அரசுப் பணியாளர் தேர்வு முறையாகவும், ஒழுங்குபடுத்தப்பட்டும் இருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை.
தேர்வுகள் எழுதும் நம் நண்பர்கள் பலர் சொல்கிறார்கள்.

அவர் அடிமைகள் திமுகவில் சேர்ந்து விட்டார் என்றால் அதை விமர்சியுங்கள். அதற்காக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக அவர் இருந்த போது,அவரது செயல்பாடு சரி இல்லை என்று சிலர் பொத்தாம் பொதுவாக குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் சொல்வதை நம்மால் ஏற்க இயலாது. கடந்து நான்கு ஐந்து ஆண்டுகளாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஓரளவுக்கு தகவல்கள் தெரியும் என்பதால் தேர்வு எழுதுபவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த கருத்தை வலுவாக பதிவு செய்கிறேன்.

நன்றி!

ஆன்டனி வளன்

புதன், 2 ஏப்ரல், 2014

டம்ளர் பாய்ஸின் காமெடியும்,அவர்களின் ஜெயலலிதா ஆதரவும்!


டம்ளர் பாய்ஸின் காமெடியும்,அவர்களின் ஜெயலலிதா ஆதரவும்!

செபாஸ்டின் சைமன் கட்சி நாடாளுமன்ற தேர்தல் குறித்த தங்களின் நிலைப்பாட்டை விவாதிக்க பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியதா கவும், இறுதியில் அறிக்கை ஒன்றை தந்திருப்பதாகவும் நண்பர்கள் செய்தி பகிர்ந்து இருக்கிறார்கள்.

சரி இவர்கள் முடிவு என்ன தான் என்று சும்மா வாசித்துப் பார்த்தால்,சுத்தி சுத்தி, அதுவும் ஒரு முன்னூற்று அறுபது டிகிரி கோணத்தில் சுத்தி, கடைசியா (அ)டிமைகள் திமுக வை இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆதரிக்கப் போவதாகவும்,(அ)டிமைகள் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிக்கையை முடித்து இருக்கிறார்கள்.என்னா ஒரு காமெடி! ஏன் காமெடி? 

செய்வதெல்லாம் மரபணு பரிசோதனை! ஆனால் தமிழர் ஒருவர் பிரதமராக வருவதை ஆதரிக்கிரார்களாம். ஜெயலலிதா தமிழரா? 

ஏண்டா ஐம்பது ஆண்டு காலமா தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் வைகோவை தமிழன் பட்டியலில் சேர்க்காத கூட்டம்,ஜெயலலிதாவை எப்படி தமிழர் பட்டியலில் சேர்த்தது? 

வைகோவைப் பற்றி சொல்லியதும், இங்கே வைகோவின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. தனி மனித வைகோவின் போராட்டங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.
தமிழன் பிரச்சினைகளுக்கு போராடாத ஜெயலலிதா தமிழச்சியா? 

கடந்த ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக இருந்த ஜெயலலிதா செய்த போராட்டங்கள், தமிழ் மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் எதையாவது சொல்ல முடியுமா கொடநாட்டில் ஓய்வு ஓய்வு ஓய்வு என்று ஐந்து ஆண்டுகளும் ஓய்வெடுத்ததைத் தவிர?

ஜெயலலிதாவின் எதிர்க்கட்சி காலத்தை விட்டு விடுவோம்.ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவும் வெகு சமீபத்தில், முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பு, கூடங்குளம் அணு உலைப் போராளிகள் மீதான அடக்குமுறைகள், தமிழ்நாட்டில் இருக்கும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு,
ஜெயலலிதா கையில் வைத்திருக்கும் காவல்துறையின் கடுமையான அடக்கு முறைகள்,
அண்ணன் கொளத்தூர் மணி மீது போடப்பட்ட பொய்யான தேசிய பாதுகாப்பு சட்டம், தமிழ்நாட்டு மக்களை சீரழிக்கும் மதுக்கடைகள்,மாநிலம் முழுவதும் நடக்கும் மணல் கொள்ளை, கிரானைட் மலைக்கொள்ளை, ஜெயலலிதாவின் அளவுக்கு மீறிய சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகள், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடை, தமிழர் நலனுக்கு எதிராக ஜெயலலிதா தொடர்ந்து செய்து வரும் மக்கள் விரோதப் போக்கு இப்படி தமிழர் நலனில் அக்கறை இல்லாத,தகுதியே இல்லாத  ஆத்தாவுக்கு செபாஸ்டின் சைமன் ஆதரவு அளிக்க என்ன காரணம்? 

செபாஸ்டின் சைமனின் ஒன்றுக்கும் உதவாத புரட்டுவாத போலி தமிழ் தேசிய தேர்தல் அறிக்கையை வைத்துக்கொண்டு, பெரிய விவாதம் எல்லாம் செய்கிறார்கள்.தமிழ் தேசியம், அது இதுவென்று என்னென்ன ஆராய்சிகள் எல்லாமோ நடத்துகிறார்கள் நண்பர்கள்.அந்த அளவுக்கு பெரிய ஆராய்சிகள் எதுவும் நடத்த தேவையே இல்லை. 

காரணம் மிக எளிது.செபாஸ்டின் சைமனின் திருமண செலவை ஏற்றுக் கொண்ட புண்ணியவான் மணல் கொள்ளை நாயகன் வைகுண்டராஜன். சென்னையில் செபாஸ்டின் சைமன் வாங்கிய புதிய வீட்டுக்கு தேவையான அனைத்து மர வேலைப்பாடுகள் மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களின் அன்பளிப்பு நாயகன்,செபாஸ்டின் சைமனுக்கு திருமண விருந்து கொடுத்து மகிழ்வித்த  புண்ணியவாளன் இவை எல்லாவற்றுக்கும் காரணம் யாரென்று பார்த்தால் சமூக விரோதி வைகுண்டராஜனாமே மெய்யாலுமா? பத்திரிக்கையாளர்கள் பலர் நம்மிடம் அப்படித் தான் சொல்கிறார்கள்:)

யார் இந்த வைகுண்டராஜன் என்றால் ஜெயலலிதாவின் பினாமி! (அ)டிமைகள் திமுக கட்சியின் ஒவ்வொரு தேர்தல் செலவையும்  ஏற்பதே வைகுண்டராஜன் தானாம். செபஸ்டின் சைமனுக்கும் வைகுண்டராஜனுக்கும் என்ன உறவு? 

செபஸ்டின் சைமன் வைகுண்டராஜனின் பங்காளி:) கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும். ஆனால் கேட்டா காங்கிரசையும், பாரதிய ஜனதாவையும் ஒழிக்க தான் இவர்கள்  பாடுபடுகிறார்களாம்:) நம்பிட்டோம்.

தமிழ்நாட்டில் காங்கிரசை அழிக்க இன்னும் யாராவது பாடு பட வேண்டுமா என்ன? அதுவே செத்த பாம்பு:) அதை அடிச்சு வேற பேரு வாங்கணுமா:) 

மத்தபடி இவிங்க பேசுற தமிழ் தேசியம், வெளக்கெண்ணை வெங்காய தேசியம் எல்லாம் சும்மா ஊரை ஏமாத்துறதுக்கு! 

இந்த சினிமாக்காரன் ஒரு பெரிய பித்தலாட்டக்காரன் என்றும் இவன் என்னென்ன தமிழ்தேசியம் மரபணு பரிசோதனை பேசினாலும் இவனை ஒருபோதும் நாம் நம்புவதற்கும் இல்லை.

சரி! தமிழ்நாடு முழுவதும் (அ)டிமைகள் திமுகவை ஆதரிக்கப் போவதாக செபாஸ்டின் சைமன் சொல்லி இருக்கிறாரே! 

கன்னியாகுமரியில் அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள் நிற்கிறார்களே!அங்கே செபாஸ்டின் சைமனின் நிலைப்பாடு என்ன என்றால் அங்கேயும் அடிமைகள் திமுக வேட்பாளர் ஜான் தங்கத்தை தான் ஆதரிக்கப் போகிறார்களாம். இன்னும் சொல்லப் போனால் செபாஸ்டின் சைமன் கூட்டத்தின்  பரப்புரை குமரியில் இருந்து தான் தொடங்கப் போகிறதாம்! நல்ல காமெடி!

ஏன் அண்ணன் சுப.உதயகுமார் என்னும் மாபெரும் போராளியை கன்னியாகுமரி தொகுதியில் ஆதரிக்கலாமே என்று கேட்டால், அண்ணன் சுப.உதயகுமாருக்கு அளிக்கும் வாக்குகள், மொத்த வாக்குகளை பிரிக்கும் உத்தியாகத் தான் இருக்குமே ஒழிய, மாறாக வெற்றிக்கான வாக்குகளாக இருக்காதாம். மாறாக இந்த வாக்குகள் பிரிவதால்,அது பாரதிய ஜனதாவின் பொன்.ராதா கிருஷ்ணன் வெற்றி பெற எளிதாகி விடுமாம். இப்படி ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள் செபாஸ்டின் சைமனின் தம்பிமார்கள்:) சுருக்கமா சொன்னால் அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள் வெற்றி வேட்பாளராக வர இயலாது என்று, இவர்களே முடிவு செய்து இருக்கிறார்கள்.

அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள், கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற மாட்டார்கள் என்று இவிங்களுக்கு எவன் சொன்னது? எவனாவது இவிங்களுக்கு சொன்ன தகவலா?அல்லது அண்ணன் உதயகுமார் அவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று விடக் கூடாது என்பது செபாஸ்டின் சைமனின் ஆசையா என்பது கேள்வியாக நிற்கிறது! 

என் பார்வையில், அண்ணன் சுப.உதயகுமாரை வெற்றி பெற விடக்கூடாது என்பது தான் செபாஸ்டின் சைமனின் ஆசை! ஆனால் அந்த ஆசி பலிக்காது என்பது வேறு.

(
அ)டிமைகள் திமுகவுக்கு ஆதரவு என்று முடிவெடுத்த பிறகு, சமூக விரோதி வைகுண்டராஜனோடு சேர்ந்து அரசியல் செய்வது என்று முடிவெடுத்த பிறகு, இங்கே என்ன தமிழ் தேசிய கொள்கைகளும் வியாக்கியானங்களும் பேச வேண்டி இருக்கு? 

சரி! அப்படி என்ன கடுப்பு செபாஸ்டின் சைமனுக்கு அண்ணன் உதயகுமார் மீது?

என்னப்பா! போன மாசம் கூட இடிந்தகரைக்கு வந்து அண்ணன் உதயகுமார் அவர்களோடு சிரிச்சு பேசிட்டு தானே போனாப்ல! இடிந்தகரை மேடையில் வேற வீராவசாமாக பேசுனாப்ல:)அதெல்லாம் சும்மா:) 

பிரச்சினை இது தாங்க!

செபாஸ்டின் சைமன் திருமணத்துக்கு பிறகு, வைகுண்டராஜன் வீட்டு விருந்துக்கு செபாஸ்டின் சைமன் போனதும், கொஞ்சி குலாவி யதுமான ஒரு சில புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளி வந்தன.புரட்சி, தமிழ்தேசியம் பேசும் செபாஸ்டின் சைமனுக்கு,சமூக விரோதி  வைகுண்டாரஜனோடு என்ன வேலை என்று கண்டித்தார் அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள். இதை தனது முகநூல் பக்கத்திலும் எழுதி இருந்தார்கள். நண்பர்கள் பலருக்கு இந்த செய்திதெரிந்திருக்கும். அதாவது சமூக விரோதிகளோடும், மணல் மாபியாக் களோடும்,மக்கள் விரோதிகளோடும் செபாஸ்டின் சைமன் கொஞ்சி குலாவுவது நல்லதல்ல.ஒரு அண்ணனாக செபாஸ்டின் சைமனுக்கு அறிவுரை சொல்கிறேன்,இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து விலகி இருங்கள்  என்றும் வெளிப் படையாக எழுதி இருந்தார்கள். நல்ல விடயம் தானே. ஆனால் இது தான் சிக்கல்.அதிலும் அண்ணன் சுப.உதயகுமார் அவர்களின் இந்த வெளிப்படைத் தன்மையான பேச்சு தான் பல அரசியல்வாதிகளுக்கு சிக்கல்.

பொறுப்பாரா செபாஸ்டின் சைமன்? என்னை எப்படி, இப்படி கேவலப் படுத்தலாம்! நான் ஒரு அரசியல்வாதி.எல்லோருடனும் பேசுவேன், பழகுவேன், அதற்காக என்னை சந்தேகப்படுவதா! நான் அப்படிப்பட்ட ஆளா என்றெல்லாம் பொங்கி எழுந்தார் செபாஸ்டின் சைமன்.கூடவே இடிந்தகரைப் போராட்டத்துக்கும் வெளிநாட்டுப் பணம் வருகிறது என்று குற்றம் சொல்கிறார்கள், நான் அதை நம்புகிறேனா என்றெல்லாம் பொங்கினார்.ரொம்ப அறிவா,லாஜிக்கா பேசி மடக்குறாராம்:)

செபாஸ்டின் சைமன் லாஜிக்கா கேட்பது போல,வைகுண்டராஜன் வீட்டு திருமணத்துக்கு அரசியல்வாதிகள் எல்லோருமா அழைக்கபட்டார்கள்?அல்லது போனார்களா? அப்படியானால் அரசியல்வாதி செபாஸ்டின் சைமனுக்கு மட்டும்,வைகுண்டராஜனிடம் என்ன சிறப்பு:) என்பதை உங்கள் ஊகத்துக்கு விட்டு விடுகிறேன்:)

உண்மையில் யோக்கியனா இருந்திருந்தா, பொறுமையாகவும், உரிமையோடும் அண்ணன் உதயகுமார் அவர்களிடம்,அந்த செய்தியில் உண்மை இல்லை.நான் அப்படி எந்த சமூக விரோதி களோடும் தொடர்பில் இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும். 

ஆனால் பல லட்சம் கோடிகள் ஊழல் நடக்கும்,மணல் கொள்ளைக்கு எதிராகவோ,அதை செய்யும் வைகுண்டராஜனுக்கு எதிராகவோ எந்த போராட்டத்தையும் செய்யாத செபஸ்டின் சைமன் வைகுண்டராஜன் வீட்டில் கறிவிருந்து சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு தானே ஆக வேண்டும்! ஊரறிந்த ஒரு விடயத்தை சைமன் எப்படி மறுக்க முடியும்?

ஆக அண்ணனின் அந்த கண்டிப்பு நாளில் இருந்து,இடிந்தகரைப் போராட்டத்தை செபாஸ்டின் சைமன்,முன்பு போல பெரிதாக கண்டு கொள்வதும் இல்லை.போராட்டம் சார்பாக ஏதாவது பேச வேண்டும் என்றால் கூட போராட்டக் குழுவினரின் அலை பேசி அழைப்புக்களை ஏற்பதும் இல்லை! இன்னும் சரியாக சொல்லப் போனால், கிட்டத்தட்ட ஒரு மூன்று மாத காலம்,செபாஸ்டின் சைமன் போராட்டக் குழு வினரின் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் இருந்தார்.இதைப் போராட்டத்தில் ஈடுபடும் பலரும் நன்கு அறிவார்கள். 

யோக்கியனா இருந்திருந்தா,தனி மனித ஈகோக்களை விட்டு விட்டு,இந்த மக்கள் போராட்டம் பெரிது என்று மக்கள் பக்கம் அல்லவா நின்று இருக்க வேண்டும். 

இதெல்லாம் சேர்ந்து தான் அண்ணன் சுப.உதயகுமாருக்கு எதிராக களம் காணவும், கன்னியாகுமரி தொகுதியில் அண்ணன் சுப.உதயகுமாருக்கு எதிராக செபாஸ்டின் சைமன் கூட்டம் வேலை செய்ய கிளம்பி இருக்கிறது.  

நீங்கள் மணல் கொள்ளையன் வீட்டில் போய் நல்ல கறிவிருந்து சாப்பிடுவீங்க. அவன் தரும் விலை உயர்ந்த அன்பளிப்புகளை எல்லாம் வாங்கிக் கொள்வீர்கள், அவன் செய்யும் மாபெரும் மணல் கொள்ளை பற்றி வாயே திறக்க மாட்டீர்கள், ஈழம் தமிழ் தேசியம் பேசும் புரட்டு வாய்களில்,கண்ணுக்கு முன் நடக்கும் பல லட்சம் கோடி மணல் கொள்ளை மட்டும் கண்ணுக்கு தெரியாது. உங்கள் புரட்டு வாய்களில் ஈயத்தை தான் காய்ச்சி ஊற்ற வேண்டும் பிராடு, பித்தலாட்டக்கார பயலுகளே!

கன்னியாகுமரி தொகுதியின் வெற்றி வேட்பாளராய்,அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்லும் நாளை, நாம் டம்ளர் பாய்ஸ்-க்கும், கூட்டத்தின் தலைவன் செபாஸ்டின் சைமனுக்கும் பரிசாகத் தருவோம்! கவலைப் படாதீங்க!  

டம்ளர் பாய்ஸ்,நீங்க அரசியலா பண்றீங்க அரசியல்!அயோக்கியத்தனமான அரசியல்!வைகுண்டராஜனையும், ஜெயலலிதாவையும் ஆதரிக்க, தமிழ் தேசிய அரசியலும், வெளக்கெண்ணை அரசியலும்! 

தஞ்சாவூரில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தபோது, வீரவசனம் பேசுன டம்ளர் பாய்சும், செபாஸ்டின் சைமனும் கபட வேடதாரிகளா?முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பு உங்களுக்கு பொழுதுபோக்கு அரசியலா? அயோக்கியப் பயலுகளா?  

என்னடா! செபாஸ்டின் சைமன் செய்யும்,அட்டூழியத்துக்கு எப்படி ஒட்டு மொத்த டம்ளர் பாய்சையும், நீங்கள் கேள்வி கேட்கலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் செபாஸ்டின் சைமன் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்காத தொண்டர்கள்,செபாஸ்டின் சைமனின் தவறான முடிவுகளுக்கும் ஜால்ரா தட்டும் மேதாவிகள் இருப்பதால் தான் மொத்தமாக டம்ளர் பாய்சைக்  கேள்வி கேட்க வேண்டிஇருக்கு:) 

-
ஆன்டனி வளன்