வியாழன், 10 நவம்பர், 2016

முதுகெலும்புள்ள ராஜ்கமல்ஜா.



முதுகெலும்புள்ள ராஜ்கமல்ஜா...

இதழியல் துறையை நோக்கி கடுமையான விமர்சனங்களை வெகு ஜன மக்கள் முன் வைப்பதும், ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக பல ஊடகங்கள் இருப்பதும் கண்கூடாக நாம் பார்க்கும் அன்றாட காட்சிகள் தான்..

மோடியின் ஆட்சியே வெறும் ஊடக பிம்பங்களால், மாயாஜால கண்கட்டி வித்தைகளால் கட்டியமைக்கப்பட்ட வெற்று பிம்ப ஆட்சி தான் என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்...மனசாட்சி உண்மையாய் வேலை செய்பவர்களின் கண்களுக்கு மட்டுமே அந்த உண்மை தெரியும்..

ஆனாலும் பத்திரிக்கையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில், வெற்று பிம்ப நாயகனை உட்கார வைத்து, மோடிஜி நீங்க சூப்பர் ஜி, நீங்க பேசிய பிறகு நாங்க பேசுவதற்கு என்ன இருக்குஜி என்று வஞ்ச புகழ்ச்சி அணியில் சும்மா நங்கு நங்கு என்று கொட்டிய ராஜ்கமல்ஜா நிஜமாவே நீர் உண்மையான பத்திரிக்கையாளன்யா...

செல்பி ஜார்னலிசம் பற்றி பேசியதும், மோடிஜி முகத்தில் அப்படி ஒரு இறுக்கம், ஈயாடவில்லை...அரசாங்கம் ஒரு பத்திரிக்கையாளனை பாராட்டினால், அது தான் அபாயம் என்று பத்திரிக்கையாளன் உணர வேண்டும்,பத்திரிக்கையாளனை நோக்கி அரசாங்கம் வைக்கும் கடுமையான விமர்சனங்கள் தான், உண்மையான பாராட்டு, உண்மையான இதழியல் மற்றும் ஊடகம் செத்து போகவில்லை, மாறாக பொய்யான சில ஊடகங்களின் ஊளை சத்தம் சற்று ஓங்கி ஒலிக்கிறது என்று பேசிய தருணம் நிஜமாவே எழுந்து நின்று கைதட்டணும் போல இருந்துச்சய்யா...

முதுகெலும்புள்ள உண்மையான பல பத்திரிக்கையாளர்கள் இன்னும் உயிர்ப்புடன் ஆங்காங்கே வீரியமாய் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது தான் உண்மையான மகிழ்ச்சியே..

எல்லாத் துறைகளிலும் உள்ள சில/பல பன்றிகள் உண்டு.. அவை சேற்றில் உழல்வது அவற்றின் இயல்பு.ஆனால் பன்றிகளைப்பற்றி கவலைப் படுவதை விட அந்த நேரத்தில் சில சிங்கங்கள் கெம்பீரமாய் உறுமும் குரலில் தான் நம்பிக்கை பிறக்கிறது..காரணம் அவை தான் காட்டின் உண்மையான பெருமைக்குரிய ராஜாக்கள்...

ராஜ்கமல் ஜா நீ சிங்கம்யா...

ஆனாலும் மோடிஜிகள் இவற்றை எல்லாம் துடைத்து போட்டு போய் விடுவார்கள், எதோ ஒரு வகையில் பழி தீர்க்கும் நேரம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்...திருந்த வாய்ப்பில்லை என்பதற்காக உண்மைகளை உறங்க விட கூடாதே!

கரன்தாப்பாரிடம் பேட்டியின் முதல் கேள்விக்கே தண்ணீர் வாங்கி குடித்து விட்டு ஓடிய மோடிஜிக்கு, இந்த விழாவில் எழுந்து ஓடுவதற்கு வழி இல்லாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.:)

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக