திங்கள், 2 பிப்ரவரி, 2015

யார் கிறிஸ்தவன்?


யார் கிறிஸ்தவன்?
இயேசுநாதர் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று நம்பாதவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அடையாளத்தில் இருக்கிறார்கள்.
மரித்தேன்,ஆனாலும்,இதோ,சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்று இயேசுநாதர் சொன்னதை நம்பாதவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அடையாளத்தில் இருக்கிறார்கள்.(வெளி 1:18 )
இயேசுநாதர் வியாதிகளை சுகமாக்கினார் என்று நம்பாதவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அடையாளத்தில் இருக்கிறார்கள்.
இயேசுநாதர் அற்புதங்களை செய்தார் என்று நம்பாதவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அடையாளத்தில் இருக்கிறார்கள்.
இயேசுநாதர்,மரித்தோரை உயிர்த்தெழ செய்தார் என்று நம்பாதவர்கள்,கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அடையாளத்தில் இருக்கிறார்கள்
இயேசுநாதர் பேய்களை விரட்டினார் என்று நம்பாதவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அடையாளத்தில் இருக்கிறார்கள்.
இயேசுநாதர் சொல்லிய பிசாசு என்ற விடயத்தையே நம்பாதவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அடையாளத்தில் இருக்கிறார்கள்.
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று இயேசு சொன்னதை ஏற்காதவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அடையாளத்தில் இருக்கிறார்கள்.
இயேசுநாதரை ஒரு புரட்சியாளராக மட்டுமே ஏற்றுக் கொண்டு,அவரது இறைத் தன்மையை புறக்கணிப்பவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அடையாளத்தில் இருக்கிறார்கள்.
அந்தோனியாரே வேண்டிக்கொள்ளும், மாதாவே வேண்டிக்கொள்ளும், சவேரியாரே வேண்டிக்கொள்ளும், செபஸ்தியாரே வேண்டிக் கொள்ளும்,சூசையப்பரே வேண்டிக்கொள்ளும் என்று பிரார்த்திக்கும், கிறிஸ்தவத்தின் அடிப்படை புரியாதவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அடையாளத்தில் இருக்கிறார்கள்.
அந்தோனியார், செபஸ்தியார், சவேரியார், மாதா போன்றவர்களின் விக்கிரகங்களுக்கு மாலை போட்டு, ஊதுவத்தி கொளுத்தி, ஊர்வலமாக எடுத்து வந்து,கிறிஸ்தவத்துக்கு முரணாக சிலைகளை தெண்டனிட்டு வணங்குபவர்கள்,கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அடையாளத்தில் இருக்கிறார்கள்.
இன்று வரை சாஸ்திரம்,சம்பிரதாயம்,நாள் பார்த்தல்,நட்சத்திரம் பார்த்தல், குறி கேட்டல்,நல்ல நேரம் பார்த்தல்,ஜோசியம் பார்த்தல்,சுப முகூர்த்தம் பார்த்து நல்ல காரியங்கள் நடத்துதல் போன்ற, கிறிஸ்தவத்துக்கு முரணான அனைத்தையும் செய்பவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அடையாளத்தில் இருக்கிறார்கள்.
வெறும் கிறிஸ்தவன் என்ற பெயர் அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு,கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுகள் புரியாதவர்கள் வைக்கும் விமர்சனங்களையோ,கேலிகளையோ குறித்து ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
அனுதின வேத வாசிப்போ,அதற்கான தெளிவான விளக்கங்களையோ கற்றுக் கொள்ளாமல்,கற்றுக் கொடுக்க சரியான நபர்கள் இல்லாமல், அதற்கான பயிற்சி போதாமல்,வெறும் மனப்பாட ஜெபங்களை மட்டுமே இன்று வரை சொல்லிப் பழகி விட்டார்கள் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதி மக்கள்.
பாரம்பரியம் என்ற பெயரில் தவறான வழிபாட்டு முறைகளையே தொடர்ந்து பிடித்துக் கொண்டு நிற்கும் இவர்களில் பெரும்பான்மையானோர்,எது சரி,எது உண்மை என்பதை நோக்கி நகரும் எண்ணம் கூட இல்லாதவர்கள்.
வேதாகமத்தை முறையாய் வாசித்து,தியானித்து இருந்தால் உண்மை எதுவென்று கிறிஸ்தவனுக்கு புரியும்.வேதாகமம் சொன்ன விடயங்களை எல்லாம் அனுபவப் பூர்வமாக உணர முடியும்.ஆனால் அதை முறையாய் வாசித்து,புரிந்து கொள்ளாதவனுக்கு?
இயேசுவே கடவுள்,மெய்யான தெய்வம் என்று ஏற்காதவனும், வேதாகமத்தை முழுமையாய் நம்பாதவனும் கிறிஸ்தவனே அல்ல எனும் போது,அவர் சொன்ன வியாதியை சுகமாக்கும் வரத்தை மட்டுமா உண்மை என்று நம்பி விடப் போகிறான்?
ஒருவேளை இயேசு சுகமாக்கினார் என்பதை நம்புகிறேன்,ஆனால் அது இன்றைய மனிதர்களால் சாத்தியமில்லை என்று ஒரு கிறிஸ்தவ பெயர் அடையாளத்தை சுமந்த ஒருவர் சொல்வார் என்றால், அவருக்கு வேதாகம அறிவும் இல்லை,அவர் கிறிஸ்தவரும் இல்லை என்று சொல்லி விட முடியும்.
எபிரெயர் 11:1 “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது”
ரோமர் 10:17 ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
மத்தேயு 10:1 அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
மத்தேயு 10:8 வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.
கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்பவன்,முதலில் முறையாக வேதாகமத்தை வாசித்து தெளிவு பெறட்டும். எது சரி,எது உண்மை என்பதை விளங்கிக் கொள்ளட்டும்.கடவுளை ஆராதிக்க சரியான வழிபாட்டு முறைகள் எதுவென்பதை புரிந்து கொள்ளட்டும்.இயேசுவை மெய்யான கடவுளாக ஏற்கட்டும்.
(***எல்லாவற்றிலும் விதி விலக்குகள் உண்டு***)
**கிறிஸ்தவ நண்பர்களுக்கான பதிவு**
குறிப்பு:
விவாதங்கள்,எது சரி எது தவறு என்று வேதாகமத்தின் அடிப்படையில்,இருக்குமானால் மட்டுமே பதில் சொல்லப்படும். மற்றபடி அது அவர்கள் நம்பிக்கை, இது இவர்கள் நம்பிக்கை போன்ற பொத்தாம் பொதுவான,மேம்போக்கான வாதங்கள் ஏற்கப்படாது.
கிறிஸ்தவ சபைகளின் உட்பிரிவுகளில் எது சரி,எது தவறு போன்ற விவாதங்கள் ஏற்கப் படாது.*
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

1 கருத்து:

  1. சரியான முறையில் பதிவு செய்துள்ளீர், கிறிஸ்தவ மதத்தினர் தெளிவாக படித்தால் சரி

    பதிலளிநீக்கு