வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

சவுக்கு சங்கருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!


சவுக்கு சங்கருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

கிட்டத்தட்ட நான்கு,ஐந்து ஆண்டுகளாக சவுக்கு தளம் எனக்கு பரிச்சயம். இன்னும் சொல்லப்போனால் சவுக்கு தளம் ஆரம்பித்தே ஐந்து ஆண்டுகள் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.ரொம்ப மிரட்டலாக,அசாத்திய துணிச்சல் மிக்க தளமாக தான், நான் சவுக்கு தளத்தை முதலில் பார்த்தேன்.அந்த அளவுக்கு அதி நுட்பமான பல தகவல்கள்.எந்த வெகு ஜன ஊடகங்களிலும் வராத செய்திகள் அவை.நண்பர்கள் பலரிடம் அந்த தளத்தைப் பற்றி சிலாகித்து பேசியதுண்டு.
பலருக்கு அறிமுகம் செய்து வைத்ததுண்டு.என்னைப் போன்றே நீண்ட நெடிய காலமாக சவுக்கு தளத்தை வாசிக்கும் ஏராளமான என் நண்பர்கள் இருக்கிறார்கள்.

காவல்துறை, நீதித் துறை ,லஞ்சம் ஊழல் சார்ந்த எண்ணற்ற கட்டுரைகள் அங்கே நான் படித்ததுண்டு. பல்வேறு அரசியல் தலைவர்களின் அட்டூழியங்களை,அயோக்கியத்தனங்களை எல்லாம் புட்டு புட்டு வைப்பார் சங்கர்.என்னால் மறக்க முடியாத ஒரு வாக்கியம் எதுவென்றால், தளம் ஆரம்பித்த புதிதில்,தளத்தின் ஒரு பக்கம் கருணாநிதியின் ஆட்சி முடிய எத்தனை நாட்கள் என்று ஒரு வாசகத்தோடு கூடிய நாட்காட்டி இருக்கும்.ஒவ்வொரு நாளும் அந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். இப்போது நினைத்து பார்த்தாலும் எனக்கு சிரிப்பு வரும்,அந்த அளவுக்கு நக்கல் நையாண்டியோடு கூடிய தீர்க்கமான சிந்தனை அது.

கருணாநிதியுன் குடும்பத்தை கடுமையாக சேதப்படுத்தியில், அக்குவேர் ஆணிவேராக பிரித்து மேய்ந்ததில், ஊழல்கள் , அட்டூழியங்களை எல்லாம் வெளிக் கொண்டு வந்ததில் சவுக்குக்கு முக்கிய பங்கு உண்டு,ஜாபர்சேட்டுக்கும், சவுக்குக்கும் ஏற்பட்ட பழி தீர்க்கும் படலம் ஆரம்பித்த நாட்களை எல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்.அந்த பதிவுகள் எல்லாம் ஆண்டுகள் பல ஆன போதும் கூட,மனதில் அப்படியே பதிந்து விட்டது.ஜாபர்சேட் கட்டிய புதிய அடுக்கு மாடி வீடு எப்படி, பணம் எப்படி வந்தது என்று எங்கெல்லாமோ துருவி துருவி தகவல்களை எல்லாம் புட்டு புட்டு வைத்தார் சங்கர்.

நீதிபதிகள் செய்யும் அட்டூழியங்கள், ஊடகத்துறை அட்டூழியங்கள், காவல் துறை அட்டூழியங்கள், போலி என்கவுண்டர், காவல்துறை உயர் அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம், பெரும் முதலாளிகளின் கொள்ளைகள்,அரசு ஊழியர்கள் வாங்கும் லஞ்சம், தேர்தல் அதிகாரிகளின் முறைகேடுகள், மோடி போன்ற பல பிரபலங்களின் முகத்திரையை கிழித்தல் இப்படி எல்லா தரப்பு தகவல்களையும் ஆதாரத்தோடு திரட்டி எழுதுவார்.லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றியதால்,காவல்துறை மற்றும் நீதித்துறை சம்மந்தப்பட்ட பதிவுகள் ஏராளம்.இன்னும் சொல்லப் போனால் காவல்துறை மற்றும் நீதித்துறை சார்ந்த நபர்களின் பணி இடமாற்ற தகவல்களை இணையங்களில் ஆதாரப் பூர்வமாக முதலில் வெளியிடும் நபர் சங்கராகத் தான் இருக்கும்.

எண்ணற்ற சர்ச்சைகள் இவர் மீது உண்டு. சன் தொலைக்காட்சி ஊழியர் குறித்த சமீபத்திய பதிவுகள் ஏகப்பட்ட சர்ச்சைகளை உருவாக்கியது. மற்றபடி எப்போதும் கருணாநிதி குடும்பத்து சிக்கல்களை,ஊழல்களை சந்தி சிரிக்க வைப்பதில் சவுக்கு என்றைக்குமே சவுக்கு தான்! சவுக்கை அடிச்சுக்க ஆளே இல்லை. கருணாநிதி வீட்டு சமாச்சாரங்கள் சவுக்குக்கு லட்டு திங்கிற மாதிரி:)

அலைக்கற்றை புகழ் கனிமொழி மற்றும் ஜாபர் சேட்டின் உரையாடல்களை எல்லாம் சமீபத்தில் முழுமையாக கேட்ட பிறகு அப்படியே ஆடிப் போயிட்டேன்!ஜாபர்சேட்டின் பேச்சுக்களை பார்த்தால்,காவல்துறை என்ன லட்சணத்தில் இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.கருணாநிதி மகள் கனிமொழியா! எப்பா சாமிகளா கருணாநிதியையே வித்துட்டு வந்து விடுவாள் போலிருக்கிறது கனிமொழி!

ஸ்டாலின், அழகிரி எல்லாம் இவளிடம் தான் ஊழல் வியாபாரம் படிக்க வேண்டும் போலிருக்கிறது. கனிமொழியின் ஆத்தா ராசாத்தி அம்மா கொள்ளை அடிக்க சரியான ஆளாகத் தான் இருப்பார் போலிருக்கிறது!ஆத்தாளையும் மகளையும் விட்டா,ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே விற்று விடுவார்கள் போல இருக்கிறது! முன்னொரு காலத்தில் சவுக்கு எழுதிய தொழிலதிபர் ராசாத்தி அம்மாள் கட்டுரை எல்லாம் அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்து போகிறது, அண்ணா சாலையில் உள்ள வோல்டாஸ்-இன் முன்னூறு கோடி சொத்தை முழுசாக முழுங்க வேண்டும் என்று ராசாத்தி அம்மாள் செய்த அட்டூழியங்கள், வியாபார பேரங்களை எல்லாம் சவுக்கு எழுதியதை எண்ணிப் பார்த்து விட்டு, அதோடு அலைக்கற்றை ஊழலை பொருத்திப் பார்த்தால் ரொம்ப சரியாத் தான் இருக்கு. ஒன்னும் சொல்வதற்கு இல்லை.ஒட்டு மொத்த குடும்பமும் கழிசடை பய குடும்பமா இருக்கும் போலேயே!

இவிங்க அடிக்கிற கொள்ளைப் பணத்தை எல்லாம் சாகும் போது இவிங்களோட கட்டி அனுப்பியா விடப் போறானுங்க? எத்தனை தலைமுறைக்கு சேர்த்து வைக்கிறார்கள்? மானம் கெட்ட பயலுக! பேராசைக்கு ஒரு அளவு வேண்டாமா? இதுல கலைஞர் தொலைக்காட்சிக்கு கொடுக்கப்பட்ட இருநூறு கோடி ரூபாயை வட்டியோடு திருப்பி கொடுத்து விட்டோம் என்று செய்தி கொடுப்போம்.மக்கள் நம்புவார்களாம்.தமிழ்நாட்டு மக்கள் நல்ல இழிச்சவாய் பயலுகன்னு நெனச்சுகிட்டு மக்கள் நம்புவாங்கள் என்று நக்கல் நையாண்டி வேற!

அரசியல் களத்துல இருந்து இந்த பயலுக ஒழிக்காமல் விடக் கூடாது! திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்த கூட்டம் இன்றைக்கு ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முக்கிய இடம். எங்க போய் சம்பாதித்து கழட்டினார்கள்? அரசியலைத் தவிர வேறென்ன வியாபாரம் செய்தது இந்த குடும்பம்,ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் வருவதற்கு?

பல நேரங்களில் சவுக்கு ஒரு சார்பாக செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றும். சவுக்கின் எண்ணங்கள் சிலவற்றில்,முரண்பட்ட கருத்துக்கள் நமக்கு உண்டு. அதற்கு ஒரு காரணம் ஜெயலலிதாவின் மூன்று முறை ஆட்சியில் நடந்த கொள்ளைகள்,அட்டூழியங்கள் குறித்த தீர்க்கமான கட்டுரைகளை நான் அதிகம் படித்ததில்லை. சசிகலா குடும்பம் மற்றும் மன்னார்குடி மாபியா என்று பிரித்து மேய்ந்தது எல்லாம் ஞாபகத்தில் உண்டு. அய்யா நடராசன் அவர்களை விளாசு விளாசு என்று விளாசித் எல்லாம் ஞாபத்தில் உண்டு. கருணாநிதி குடும்பம் அளவுக்கு, ஜெயலலிதாவின் மீதும் ஏகப்பட்ட ஊழல்கள், முறைகேடுகள் கட்டாயம் உண்டு. கருணாநிதி குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்தது போலவே,கூடிய விரைவில் ஜெயலலிதா ஆட்சியின் அட்டூழியங்களை எல்லாம் சங்கர் புட்டு புட்டு வைப்பார் என்று நம்புகிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மாதிரியான கட்டுரைகளை எழுத ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். உயிர் பாதுகாப்பு சார்ந்த விடயங்கள் எல்லாம் இருக்கின்றன.

உண்மைகளை, ஆட்சியாளர்களின் அட்டூழியங்களை எல்லாம் சாதாரணமாக வெளியில் சொல்ல முடியாத சூழல் தான் இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் நிலவுகிறது.வெகு ஜன காட்சி ஊடகங்கள், பத்திரிக்கை ஊடகங்கள் கூட இது போன்ற ஊழல்களை எழுத மாட்டார்கள். காரணம் ஊடகங்களே அயோக்கியத் தனங்களை தான் செய்கின்றன.ஊடக முதலாளிகளில் பெரும்பான்மை அயோக்கியனும் மொள்ளைமாறியும் தான். அப்புறம் எப்படி அவன் ஊடகம் மட்டும் ஊழல், லஞ்சம் பற்றி பேசும்?வெகு ஜன ஊடகங்களில் வராத,பல அரிய தகவல்களை எல்லாம், சவுக்கு தளத்தின் மூலமாக என் போன்ற பலர் அறிந்திருப்பார்கள்.

தவறாக தற்காலிக பணி இடை நீக்கம் செய்ப்பட்டு இருக்கும் சங்கருக்கு, மீண்டும் அதே அரசு லஞ்ச ஒழிப்பு துறையில் வேலை கிடைக்க வேண்டும். அதற்காக அவர் தொடர்ந்திருக்கும் வழக்கில் அவர் வெல்ல வேண்டும்.

தற்போதைய தமிழ்நாட்டு வெகு ஜன ஊடகங்களில்,பெரும்பான்மை பத்திரிக்கையாளர்களுக்கு இல்லாத வலுவான முதுகெலும்பு சங்கருக்கு இருப்பதற்காக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

பத்திரிக்கையாளர்கள் பலர் இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏராளமான விடயங்கள் உண்டு!இறைவன் சங்கருக்கு நீடிய ஆயுளைத் தரட்டும்!

வாழ்த்துக்கள் சங்கர்!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக