செவ்வாய், 20 ஜனவரி, 2015

உணர்ச்சி வசப் படாதீங்கப்பு


“அகரம்” “அகரம்” என்று சூர்யாவின் கல்வி அறக்கட்டளை பற்றிவிஜய் தொலைக்காட்சியில் போட்ட காட்சிகளைப் பார்த்து,மக்கள் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்காங்க!
கோடி கோடியாய் சம்பாதிக்கும் அவன் உதவி செய்தானா,இவன் உதவி செய்தானா,சூர்யாவைப் போன்ற உன்னத மனிதர்கள் உலகில் உண்டா என்று வீர வசன தொனிகளைக் கேட்க முடிகிறது.
ராசாக்களா ரொம்ப பொங்காதீங்க, உணர்ச்சி வசப் படாதீங்க.அதற்கு பின்னால் இருக்கும் விடயங்களை எல்லாம் கொஞ்சம் தேடித் தேடி படிங்க ராசா! சும்மா ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது ஆமா.
ஊடகங்கள் சொல்லும் செய்திகளை எல்லாம் அப்படியே நம்பிட்டு பொங்கிடக் கூடாது. ஊடக அரசியல் தான் இன்றைக்கு மிகப் பெரிய அரசியல். பொய்யும் புரட்டும் நிறைந்த அரசியல்.
ஆகவே அகரம் அறக்கட்டளை சார்ந்து நிறையப் படிங்க. மொத்தத்துல ஒவ்வொரு விடயத்துக்கும் ஆதரவா, எதிரா எழுதுற பல தளங்களைப் படிங்க. அப்புறமா ஒரு முடிவுக்கு வாங்க!
என்னய்யா எல்லாத்தையும் குறை சொல்லிட்டே இருக்கான் மனுஷன் அப்டின்னு உங்களுக்கு என் மேல கோவம் வரத் தான் செய்யும்.என்ன செய்யட்டும்?
உண்மையில் உங்களால் முடிந்த உதவிகள் சிறிதாயினும், பெரிதாயினும், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் சத்தமே இல்லாமல், உங்கள் சொந்தப் பணத்தில் இருந்து செய்து கொண்டு போயிட்டே இருங்க.அது தான் உத்தமம்.
ஒரே ஒரு சின்ன செய்தி சொல்ல வேண்டும் என்றால் சூர்யா கேட்டதும், ஏழை மாணவர்களுக்கு இலவசமாய் கல்வி தருவதாய் சொன்ன கல்லூரிகள், நீங்களும் நானும் போய், அப்படிப்பட்ட தகுதியான ஏழை மாணவர்களுக்கு இலவசமாய் இடம் தரச் சொல்லி கேட்டால் தருவார்களா? கட்டாயம் பெரும்பான்மை கல்லூரிகள் தரப் போவதில்லை என்பதே நிதர்சனம்.
என்ன காரணம்? உதவி செய்வது தான் கல்வியாளர்களின் நோக்கம் என்றால் சூர்யா போய் கேட்டால் என்ன, அல்லது நீங்களோ நானோ போய் அதே தகுதியான ஏழை மாணவனுக்கு(தேவையான வருமான ஆவணங்களோடு) கேட்டால் என்ன? சூர்யா கேட்டால் சரி என்று சொல்லும் நிறுவனங்கள், நீங்கள் கேட்டால் ஏன் தர மறுக்கின்றன?
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. எல்லாருக்கும் இங்கே ஒரு விளம்பரம் தேவைப் படுகிறது. ஆமா!
அதுமட்டுமல்ல இன்றைக்கு தமிழ்நாட்டில் கல்வித் தந்தைகளை விட மிகப் பெரிய பகல் கொள்ளைக்காரர்கள் வேறு எவரும் இல்லை. கொள்ளையடித்தாலும் பரவாயில்லை, ஆனால் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கல்வியாளர்களின் மனசப் பாருங்க சார், என்று நாயகன் பட வசனத்தை தூக்கிட்டு வந்துடாதீங்க:)
ஆமா இந்த கல்வியாளர்களுக்கும், உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட சூர்யாவுக்கும் என்ன சம்மந்தம்? நெறைய சம்மந்தம் இருக்கு, எல்லாத்தையும் நானே சொல்லிட்டா எப்படி?நீங்களே படிச்சுக்கோங்க. அது தான் சரியாக இருக்கும். மொத்தத்துல ஊடகங்களிடம் கொஞ்சம் சூதானமா இருங்கப்பு! ஆமா அம்புட்டு தான் சொல்ல முடியும்.
நமக்குத் தெரிந்து,நமது நண்பர்கள் சிலர் சத்தமே இல்லாமல் இது போன்ற கல்வி உதவிகளை, தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாய் செய்து வருகிறார்கள்.இது தான் நிஜம்.
விளம்பரமே இல்லாமல்,எந்த பிரதிபலனும் இல்லாமல் சொந்தப் பணத்தில் உதவி செய்யும் இவர்கள் தான் போற்றப் பட வேண்டியவர்கள்.
திட்டுறவங்க திட்டிக் கொள்ளலாம்:)
-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக