செவ்வாய், 20 ஜனவரி, 2015

அண்ணா ஹசாரே டுபாக்கூர் கூட்டம்


ஹசாரே கூட்டமே,ஒரு அயோக்கியக் கூட்டம் தான் என்று ஆரம்பத்திலேயே எத்தனையோ பேர் படிச்சு படிச்சு சொன்னாங்க! இவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி யின் பி டீம் என்று சொல்லிப் பார்த்தார்கள். 

அது மட்டுமல்ல அண்ணா ஹ்சாரே ஒரு உலக மகா டுபாக்கூர் என்றும், அண்ணா ஹசாரேயின் சொந்த ஊரான ராலேசித்தியில் பாலும்,தேனும் ஓடுவதாக ஊடக அயோக்கியர்கள் வியாபாரம்(விபச்சாரம்)செய்த போது, இல்ல இல்ல அது ரொம்ப பஞ்சத்துல அடிபட்ட,வளர்ச்சி அடையாத,அடிப்படைப் பிற்போக்குத் தனங்கள் நிறைந்த, மிக சாதாரண ஊரு.

அங்க குடி கும்மாளம் எல்லாம் உண்டு.சாராயமும் இருக்கு,புகைப் பழக்கமும் இருக்கு. மற்றபடி ஊடகங்கள் சொல்வது போல சொர்க்க பூமி எல்லாம் இல்லை என்று,நேரடியாகவே சென்று கள ஆய்வுகள் செய்து உண்மையை பதிவு செய்த எழுத்தாளர்களையும் அறிவேன்.

வெறுமனே ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப் பட்ட, போலியான அந்த டுபாக்கூர் ஹசாரே பலூனை, இதோ புரட்சி வந்து விட்டது என்று நம்பி ஏமார்ந்த கூட்டம் இங்கே ஏராளம் உண்டு.ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த சினிமாக்காரனுங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.இவிங்க மொதல்ல இவிங்க வாங்குற சம்பளத்துக்கு முறையான வரி கட்டுறதும் இல்லை.உண்மையான சம்பளத்தை கணக்கில் காட்டாமல், கறுப்புப் பணமாய் வாங்கி சுருட்டுவதும் இவிங்க தான் என்பது தனிக்கதை.

தமிழனின் பிரச்சினைகளுக்கு,ஏன் இனப்படுகொலைக்கே மௌனம் காத்த பல அறிவாளிகள்,பல ஐ.டி ஊழியர்கள் பெரும்பான்மை ஆண்கள்,பெண்கள் இங்கே எதோ புரட்சி வந்து விட்டதாய் அண்ணா ஹசாரேவுக்கு கொடி பிடித்து,தங்கள் நிறுவனங்களுக்கு முன்பு ஊர்வலம் நடத்திய கதைகள் ஏராளம் உண்டு. உடனே ஐடி ஊழியர்கள் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையா என்றெல்லாம் கேள்விகளைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்.

அண்ணா ஹசாரேவை அடுத்த காந்தியாக எண்ணி,மெழுகுவர்த்தி ஏந்தி,நான் தான் ஹசாரே என்று கோமாளித்தன தொப்பி அணிந்து, வரிந்து கட்டிக் கொண்டு பேசி,மொத்தமாய் ஏமார்ந்த கூட்டத்தைப் பற்றி இங்கே பேசுகிறேன்.இந்த கார்ப்பரேட் பூர்ச்சி கூட்டத்திடம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது நமது கடமை.

எவன் பூர்ச்சியாளன், எவன் டுபாக்கூர் என்ற வித்தியாசத்தை உணர கால அவகாசம் எடுத்து,சிந்தித்து நிதானித்து அறிந்து கொண்டு,அதன் பிறகு செயல்படுவது உத்தமம்.

ஊழலை ஒழிக்கப் பிறந்த(????) கிரண்பேடி அன்னா ஹசாரேவின் பின்னாடி நின்று கொண்டு தேசியக் கொடியை பிடித்துக் கொண்டு நின்றது, இந்தா இப்ப கொடி மட்டும் மாறி இருக்கு.அடுத்து இந்தா சாசியா இல்மி கல்மி என்று இதுவும் ஹசாரே அயோக்கியக் கூட்டத்தின் அடுத்த சாம்பிள்.

எல்லாம் கழிசடைகளாத் தான் இருந்திருக்கும் போல. சூடு சொரணை எல்லாம் இருக்குமா? சந்தேகமா இருக்கு.

மொத்தத்துல ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கபப்டும், இந்த போலி பூர்ச்சி பலூன்களில், ரொம்ப நாளைக்கு காத்து தங்காது. சீக்கிரம் புஸ் ஆகிடும்.ஆமா...

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக