வெள்ளி, 30 ஜனவரி, 2015

வாழ்த்துகள் சசிரேகா!





வாழ்த்துகள் சசிரேகா!பெண் ஊழியரை டிஸ்மிஸ் செய்த உத்தரவை வாபஸ் பெற்றது டி.சி.எஸ்.குரோம்பேட்டையைச் சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரியான சசிரேகா டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை பணி நீக்கம் செய்து கடந்த மாதம் 22ம் தேதி உததரவு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்ற படியேறி, தற்போது வெற்றி பெற்றுள்ளார் சசிரேகா.

இருபத்தைந்தாயிரம் மூத்த ஊழியர்களை நிறுவனத்தை வெளியேற்றும் எண்ணம் கொண்டது டிசிஎஸ் மட்டுமல்ல,டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து,இன்னும் பல பிரபலமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களையும் வெளியேற்றும் எண்ணத்துடனேயே இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போதைய நீதிமன்ற நடவடிக்கை,ஊடக விவாதங்கள்,

இயக்கங்களின் போராட்டங்கள் போன்றவற்றையெல்லாம் பார்த்து கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றன அந்த ஐடி நிறுவனங்கள்.

நீதிமன்ற படியேறிய சசிரேகாவின் முயற்சி உண்மையில் பாராட்டத்தக்க முயற்சி மட்டுமல்ல பலருக்கு முன் உதாரணமும் கூட.


லட்ச லட்சமாய் சம்பாதிப்பாதாக சொல்லிக் கொண்டாலும் கூட, பணிக்கான எந்த பாதுகாப்பும் உத்தரவாதமும் இல்லாத மற்றும் சிக்கலான நேரங்களில் குரல் கொடுக்க எந்த ஒரு வலுவான தொழிற்சங்கங்களும் இல்லாத ஐடி துறையினர், இதற்கான ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவது நல்லது.


முந்தைய காலங்களில் இது போன்று பணி இழந்த ஆயிரக் கணக்கானோர் சசிரேகா போன்று எதிர்த்து நிற்க முடியாமல் அல்லது அந்த வழி தெரியாமல் அல்லது மிகப் பெரும் தொழில் நிறுவனங்களை எதிர்த்து போடப்படும் நீதிமன்ற வழக்குகள் எவ்வித பயனும் அளிக்காது என்று கடந்து சென்ற நிலையில்,சசிரேகாவின் இந்த வெற்றி பலருக்கு உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த சிக்கலை மிகப் பெரிய அளவில் ஊடக வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பல்வேறு போராட்டங்களை முன் நின்று நடத்திய அனைத்து அமைப்புகளுக்கும் கூடுதல் நன்றி சொல்ல வேண்டியது நமது கடமை.-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக