செவ்வாய், 20 ஜனவரி, 2015

நட்சத்திர பொங்கல்


பொங்கல் என்றாலே நடிகர், நடிகைகள் தானா? மாட்டுப் பொங்கல் என்றாலும் நடிகர் நடிகைகள் தானா? திருவள்ளுவர் தினம் என்றாலும் நடிகர்,நடிகைகள் தானா?
இந்த தனியார் தொலைக்காட்சிகளே இப்படித்தான்யா, விவசாயத்துக்கு சம்மந்தமே இல்லாத,சினிமா ஆட்களை கூட்டிவந்து பொங்கல் சிறப்பு பேட்டி, பெரிய திரை நடிகர் நடிகைகள் கொண்டாடும் பொங்கல், சின்னத்திரை நடிகர் நடிகைகள் கொண்டாடும் பொங்கல்,என்று திரும்புற பக்கம் எல்லாம் ஒரே சினிமாக்கரானுங்க தான் தொலைக்காட்சியை ஆக்கிரமிக்கிறானுங்க! இப்படி ஒரு பக்கம் குமுறல்.
இன்னொரு பக்கம் பார்த்தா பொங்கல் என்றாலே தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக் கொண்டு புதுப் புது சினிமாவா போட்டு தாக்குறானுங்க, விவசாயம் குறித்தோ அல்லது பொங்கல் விழாவின் சிறப்பு,தமிழனின் பண்பாடு, விவசாயிகளின் இன்றைய சிக்கல்கள், விவசாயத்தை வளர்ப்பது எப்படி போன்ற தலைப்புகளில் விவாதித்து,விவசாயிகளை பெருமைப்படுத்தும் விதமாக, உழைப்பவர்களின் பேட்டியை தொலைக்காட்சியில் போட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் செய்யாமல்,மக்களை சிந்திக்க விடாமல் கேளிக்கைகளில் மூழிக் கிடக்க செய்வதே இந்த தனியார் தொலைக்காட்சிகளின் வேலையாய் போச்சு என்று பொது வெளியில் பேசும் நபர்களில் எத்தனை பேர்,இந்த இரண்டு நாட்களும் எந்த நடிகர், நடிகையின் பேட்டியையும் நான் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை,எந்த நடிகர் நடிகைகளின் பொங்கல் கொண்டாட்டங்களையும் வாய் பிளந்து பார்க்கவில்லை,எந்த சினிமாக்களையும் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை, இதற்கெல்லாம் மாற்றாக விவசாயம் குறித்தும், தமிழனின் பண்பாடு, இயற்கை விவசாயம்,இன்றைய விவசாயிகளின் சிக்கல்கள்,பசுமைப் புரட்சி பற்றியெல்லாம் இணையத்தில்/தொலைக்காட்சியில் தேடிப் பார்த்து/படித்து தெரிந்து கொண்டேன். இயற்கை விவசாயம் குறித்த மறைந்த அய்யா நம்மாழ்வாரின் நாலு பேட்டிகளை யூ டியூபில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்ல முடியும்?
பொங்கலுக்காவது நாலு விவசாயியை கூப்பிட்டு பேட்டி எடுத்துப் போடலாம்ல, இப்படி திரும்புற பக்கம் எல்லாம் சினிமாக்கரனுக்கு என்ன வேலை என்று ஆதங்கபப்டும் நண்பர்களும் கூட,அதே நடிகைகள் பேட்டியையும்,நடிகைகளின் பொங்கல் கொண்டாட்டங்களையும் பார்த்துகிட்டே தொலைக்காட்சி நிறுவனங்களை மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம்?
டிவிக்காரன் என்ன கருமத்தை வேண்டுமானாலும் போட்டுட்டு போறான்யா, ஆனால் இந்த நிகழ்வுகளை நாம் என்றைக்காவது புறக்கணிப்பு செய்து இருக்கிறோமா?
அட ஏன்யா..இந்த ரெண்டு நாளும் தான் நம்ம மக்கள் சந்தோசமா குடும்பத்தோட உட்கார்ந்து டிவி பார்க்கிற நேரம். அவன் நடிகை பேட்டியை பார்க்குறானோ, நடிகர் பேட்டியைப் பார்க்குறானோ,எதுவா இருந்தா என்ன? இதுல எதுக்கு அறிவு சார்ந்த விவாதம் எல்லாம்?தொலைக்காட்சியில் நாங்க என்ன பாக்கணும்னு அடுத்தவன் எனக்கு புத்தி சொல்ல வேண்டியதில்லை என்று திருப்பிக் கேட்கும் நபர்களுக்கான பதிவு அல்ல.
கடந்த ரெண்டு நாளும் எந்த நடிகர் நடிகையின் பேட்டியும் பார்த்ததில்லை:)
பொங்கல் மற்றும் சிறப்பு நாட்களில் அவிங்க பேட்டியை பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை:)
அதுலயும் இந்த சினிமாக்காரனுங்க பேட்டி இருக்கே! உலகத்துலேயே ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து சம்பாதிக்கும் ஒரே வர்க்கம் இந்த சினிமா வர்க்கம் என்ற அளவுக்கு அலப்பறை தாங்க முடியாது.சினிமாக்கரனுங்கள தவிர இங்க மற்றவர்கள் எல்லாம் என்னமோ கஷ்டமே இல்லாமல்,ஆபீஸ்ல காய்க்கிற பண மரத்துல இருந்து பணத்தை அப்படியே ஓசியா பறிச்சு வீட்டுக்கு எடுத்துட்டு வர்றானுங்க:)ஆமா:)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக