வியாழன், 16 ஜனவரி, 2014

அமெரிக்க அரை நிர்வாண விசாரணை!


அமெரிக்க அரை நிர்வாண விசாரணை!

இந்தியாவில் இருந்து அமேரிக்கா செல்லும் எத்தனை பேர் அரை நிர்வாணப் படுத்தப் பட்டு விசாரிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்று கேட்பீர்கள் என்றால், எனக்கு தெரிந்தவரை பெரும் முதலாளிகள்/தொழிலதிபர்கள் மற்றும் இந்திய அரசியல்வாதிகள்/அதிகாரிகளைத் தவிர பெரும்பாலான வெகு ஜன மக்கள்,அமெரிக்க காவல்துறையால் கடுமையாக விசாரிக்கப் பட்டு இருப்பார்கள். பல நேரங்களில் கண்ணாடி கூண்டுகளுக்குள் நிறுத்தப்பட்டு,அங்குலம் அங்குலமாக விசாரிக்கப்படுவதுண்டு!

இந்திய கடவுசீட்டு என்றாலே, தனி வரிசை தான். இது இந்தியாவுக்கு மட்டும் தானா என்றால் இல்லை.அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் வளர்ந்த சில நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களுக்கு நடக்கும் அன்றாட நிகழ்வு!

இது சரியா என்றால் நம்மை பொறுத்தவரை தவறு, அல்லது இது கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர்!

ஆனால் அமெரிக்கனை கேட்டால் இது என் நாட்டு சட்டம் அல்லது என் நாட்டின் பாதுகாப்பு என்று சொல்வான்! அதுக்கும் மேல கேட்டா இஷ்டம் இருந்தா என் நாட்டுக்கு வா!இல்லாவிட்டால் போ என்னும் மன நிலை தான் அவர்களுக்கு!

இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகங்களில் விசா நேர்காணலுக்கு செல்லும் போதே, நமக்கு விசா கிடைக்குமா கிடைக்காதா என்ற ஓராயிரம் மன அழுத்தம். அவன் மனமுவந்து விசா கொடுத்தால் உண்டு. இல்லாவிட்டால் ஏன் என்று கூட கேள்வி கேட்க முடியாது! நம்ம வாயை மூடிகிட்டு அமைதியா தான் வரணும்!

நம்மை நேர்காணல் செய்யும் அமெரிக்கனின் மனநிலை எல்லாம் எப்படி இருக்கும் என்று அவனுக்கும் சேர்த்தே நாம் கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டிய சூழல்!பொதுவாக அவர்களது நேர்காணல்கள் மிக கடுமையாகவே இருக்கும் உலகின் மற்ற நாடுகளை விட! கிட்டத்தட்ட உலகின் மற்ற நாடுகளுக்கு அதிக கெடுபிடிகள் இல்லை என்றே சொல்லலாம்!

அமெரிக்காவில் நடந்த ரெட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு,உலகில் உள்ள எந்த இஸ்லாமியர் என்றாலும் அமெரிக்கக் விசா கிடைப்பது ரொம்ப கஷ்டம்!ஒரு சில இஸ்லாமிய நண்பர்கள் அமெரிக்க விசா நேர்காணலுக்கு சென்று வந்த பிறகு, மூன்று நாள் அல்லது ஐந்து நாளில் கிடைக்க வேண்டிய விசா, இரண்டு ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டதும் உண்டு! ஏன் என்று யாரை கேள்வி கேட்க முடியும்?

என்ன நடக்கிறது என்பது முழுமையாக் தெரியாது! என்ன காரணம் என்று அவர்களது இணைய தளத்தில் பார்த்தால் விசாரணையில் இருப்பதாக மட்டுமே தகவல் இருக்கும்!யாரோ சில இஸ்லாமியர்கள் செய்த தவறுக்காக உலகில் உள்ள ஒட்டு மொத்த இஸ்லாமியர்களையும் இப்படி நடத்தலாமா என்று அமெரிக்க பெரியண்ணனிடம் எவரும் கேள்வி கேட்க இயலாது! அவர்கள் வைப்பது தான் உலக சட்டம்! அத்தனை பெரிய உலக சட்டம்பிகள் அவர்கள்!

ஏன் இந்தியர்களையும்,ஆசிய கண்டத்து மக்களையும் உங்கள் விமான நிலையங்களில் வைத்து அரை நிர்வாணப் படுத்தி விசாரிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்ப இயலாது!இந்த அளவுக்கு அவமானப் படுத்துகிறோம்.அப்படி இருந்தும் மானம் ரோஷம் இருக்குற பயலுக எதுக்குடா அமெரிக்காவுக்கு வேலைக்கு வர்றீங்க என்று அவன் நம்மள திருப்பி கேள்வி கேட்டா நமக்கு பதில் இல்ல! அமெரிக்காவுக்கு வேலைக்கு போகும் பலருக்கும்,இதற்கான பதில் இல்லை!நம்முடைய வணிகம் எல்லாம் மேறகத்திய நாடுகளை சார்ந்தே அல்லவா இருக்கிறது! பிறகு நம்ம என்னத்த வீர வசனம் பேச!

ஓராண்டு கால அமெரிக்க வாழ்வில்,நானும் நண்பர்களும்,பல விமான நிலையங்களில் அரை நிர்வாணமாக கண்ணாடி கூண்டுகளுக்குள் விசாரிக்கப்படும் போது, நமக்கு வரும் கோப மன நிலை இருக்கு பாருங்க!அதெல்லாம் வெளிய சொல்ல முடியாது! என்னடா வாழ்க்கை என்று அவமானமாகக் கூடத் தோன்றும்! 

இந்தியா ஒருவேளை வளர்ந்த நாடுகளின் பட்டியலில் வரும் போது வேண்டுமானால்,நம் மீதான இந்த அரை நிர்வாண விசாரணைகள் எல்லாம் நிறுத்தப் படலாம்!

அது வரைக்கும் நம்ம பொழப்பு:) சிலவற்றை சகிக்க வேண்டித் தான் இருக்கிறது! என்னத்த சொல்ல!

-
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக