வியாழன், 16 ஜனவரி, 2014

மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது!






















மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது!

போகிற போக்கை பார்த்தால்,டெல்லியைப் போலவே, தமிழ்நாட்டு அரசியலிலும்,நல்ல ஒரு மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் வலுவாக இருப்பதாகவே தெரிகிறது!காலம் அதைக் கட்டாயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை துளிர் விட்டு இருக்கிறது!

அலுத்துப் போன, சலித்துப் போன, புளிச்சுப் போன தி.மு.க, அண்ணா திமுக, திமுக வின் கிளை கட்சிகள், தமிழ்நாட்டின் சாதிய கட்சிகள், காங்கிரசஸ்(தமிழ்நாட்டில் ஏற்கனவே செத்துப் போன கட்சி),பாரதிய ஜனதா(தமிழ்நாட்டில் இல்லவே இல்லை),புதுசு கண்ணா புதுசு என்று சாதிய அடிப்படையில்,தமிழர்களை தரம் பிரிக்க கிளம்பி இருக்கும்,போலி தமிழ் தேசிய மரபணு பரிசோதனை கட்சிகள் இவற்றை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, புது ரத்தம் பாய்ச்சும், இளைஞர்கள் விரும்பும் மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுக்கும்,உண்மையான மாற்று அரசியல் களம் ஒன்று தமிழ்நாட்டில் வெகு விரைவில் உருவாகும்.அதற்கான நல்ல, சிறப்பான மற்றும் நேர்மையான தலைமையும் கூடவே வலுவான அரசியல் குழுவொன்றும் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது!

நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரியே தீர்மானிக்கிறான் என்றான் புரட்சியாளன் மாவோ! ஆம்.அவன் சொன்னதைப் போலவே,இங்கே நடந்து கொண்டிருக்கும் கேடுகெட்ட, கேவலமான அரசியலை,சகித்துக் கொள்ள இயலாமல்,நொந்து போன சாமனிய மக்கள்,வேறு வழியின்றி அரசியலை கையிலெடுக்க வேண்டிய நிர்பந்தம், தமிழ்நாட்டிலும் கட்டாயம் வந்து சேரும் என்பது திண்ணம்!

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மானுடத் தத்துவம்!

பொறுத்திருந்து பார்க்கலாம்!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக