வியாழன், 16 ஜனவரி, 2014

சஞ்சய் தத் நெஜமாவே சிறையில் தான் இருக்கிறாரா?


















சஞ்சய் தத் நெஜமாவே சிறையில் தான் இருக்கிறாரா?

சஞ்சய் தத் நெஜமாவே சிறையில் தான் இருக்கிறாரா?இல்ல தண்டனை தண்டனை என்று சொன்னாங்களே, ஆனா முக்கால் வாசி நாள் சிறைக்கு வெளிய தான் இருக்குற மாதிரி இருக்கு!அதான் டவுட்டு!

பிணையில் வர்ற நாட்கள் எல்லாம்,இரவு படப்பிடிப்பு எல்லாம் சிறப்பா நடக்குது.அவரது சினிமா வருமானம் எதுவும் தடைபடவில்லை.

பொதுவாக மத்திய சிறைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் பலர், முக்கால் வாசி நாட்கள் சிறைக்கு வெளியே கமுக்கமாக சுற்றுவதாக பலர் சொல்லி கேள்விப் பட்டதுண்டு!

சிறையில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளை சரிக்கட்டி விட்டால்,வெளியுலகுக்கு சிறைக்கு உள்ளே இருப்பது போன்று கணக்கு காட்டப்படும்.ஆனால் நெஜமாவே சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நபர்களில் பலர் சிறைக்கு வெளியில் இருப்பார்கள்.

சிறையில் ஏதாவது திடீரென சிறைக்கைதிகளை குறித்த கணக்கெடுப்பு மற்றும் பரிசோதனை என்றால் மட்டும் மீண்டும் சிறைக்கு சென்று விடுவார்கள் என்று பலர் சொல்லக் கேள்விப் பட்டதுண்டு. ஆனால் இதெல்லாம் சட்டத்துக்கு உட்படாமல் நடக்கும் கோல்மால்கள்.

ஆனால் சஞ்சய் தத்துக்கு எப்போதேலாம் வீட்டுக்கு போக வேண்டும் என்று தோன்றுகிறதோ, சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, சிறையில் எந்த அறை மாற்ற வேண்டுமோ,

என்ன சாப்பாடு வேண்டுமோ, என்னெல்லாம் சவுகர்யங்கள் செய்து தர வேண்டுமோ எல்லாம் கேட்டு கேட்டு ஏற்பாடு செய்து தருகிறார்கள். கிட்டத்தட்ட ராஜ வாழ்க்கை தான்!

சிறையில் இருப்பதற்கும் அவர் வீட்டில் இருப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பிறகென்ன சிறை தண்டனை?

மும்பை குண்டு வெடிப்பில்,வேறு எவனாவது ஒரு அப்பாவி சிக்கி இருந்தா இந்நேரம் சங்கு ஊதி இருக்கும் மத்திய அரசு.ஆனா இந்த தம்பி மீது ஆயுதங்கள் வைத்திருந்தார், துப்பாக்கி வைத்திருந்தார் என்று எல்லாம் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட,இவருக்கு ராஜ மரியாதை தான்! பொறந்தாலும் மச்சக்காரனா பொறக்கணும்! ஏழை வீட்டு பிள்ளையா பொறந்தா தான் சட்ட தண்டனை எல்லாம்!

பணக்காரன் ஊட்டு பிள்ளை, அரசியல்வாதி ஊட்டு பிள்ளை என்றைக்கு தண்டனை அனுபவித்து இருக்கிறது?

இருபது வருடத்துக்கு முன்பே பேட்டரி வாங்கினால்,ரசீது கொடுக்கும் பழக்கம் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்தது என்ற கற்பனையான ஜோடிக்கப்பட்ட வழக்கில்,அண்ணன் பேரறிவாளனுக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலான சிறை தண்டனை.

இந்த இருபது ஆண்டுகளில் வெளியுலகை பார்க்கவோ, ஒரு பத்து நாள் தன் வீட்டுக்கோ, தன் குடும்பத்துடனோ இருந்து போக அனுமதித்து இருக்குமா இந்த இந்திய சட்டமும்,காவல்துறையும்,சிறைத் துறையும் அதிகாரிகளும்! இருபது ஆண்டுகளில் எத்தனை முறை பிணையில் அவரை வெளியில் விட்டு இருக்கிறீர்கள்?

இதெல்லாம் பெரிய அநியாயம்டா பாவிகளா!

எதற்கு பேட்டரி வாங்கி கேட்டார்கள் என்ற தகவலே தெரியாமல்,பேட்டரி வாங்கி கொடுத்தவனுக்கு,இருபது வருடம் பிணையில் வெளி வர இயலாத அளவுக்கு கொடும் சிறை.

ஆனால் அத்தனை ஆயதங்களும் வைத்திருந்தும், மும்பை குண்டு வெடிப்பில் நேரடி தொடர்புள்ள ஒருவனுக்கு,மாதத்துக்கு ஒரு முறை பிணையோடு கூட சகல சவுகர்யங்களும்!ஏன்னா சஞ்சய் தத் அப்பன் காங்கிரஸ்காரனாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவன்! பணக்காரன். இதைத் தவிர வேற என்ன காரணம்?

இந்த நாடு நல்லா வெளங்கும்!


-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக