புதன், 15 ஜனவரி, 2014

புரட்சியாளன் நெல்சன் மண்டேலாவுக்கு வீர வணக்கம்!


விடைபெற்றது தென்னாப்பிரிக்காவின் உதய சூரியன்!
தென்னாப்பிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக, தன் வாழ்நாள் முழுவதும் உறுதியோடு களமாடிய மாமனிதன்!

காந்தியின் அறவழியில் தன் போராட்டத்தை தொடங்கிய அகிம்சாவாதி, 
பின்னாளில் ஆயுதமேந்தியதும்,கொரில்லாபோரை செவ்வனே செய்து காட்டியதும் வரலாறு!

தன் விடுதலை போராட்டத்தின் சாட்சியாய்,இருபத்தேழு ஆண்டு காலம், கடுமையான சிறைவாசம் அனுபவித்த பெருமகனார்!

தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல் கறுப்பின குடியரசுத் தலைவர்!

சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெரும் மதிப்பிற்கு உரியவர்!

உலகெங்கும், இனவெறியால் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான, மிகப்பெரிய படிப்பினையை, வலுவாக இந்த மண்ணில் விதைத்து நிற்கும் மாமனிதன் நெல்சன் மண்டேலா!

உந்தன் உடல் இந்த மண்ணை விட்டு தற்காலிகமாக பிரிந்தாலும் கூட, புரட்சியாளர்கள் ஒரு போதும் மரணிப்பதில்லை. வரலாற்றிலும்,எங்கள் இதயங்களிலும் உன் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்!

இன விடுதலையை எதிர்நோக்கி காத்து நிற்கும்,ஒடுக்கப்பட்ட இனத்தின் பிள்ளைகள் சார்பில் வீர வணக்கம்!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக