வியாழன், 16 ஜனவரி, 2014

சேட்டன்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
























சேட்டன்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

பொறந்தாலும் பொறந்தோம், மலையாளிகள் பூமியிலோ அல்லது கன்னடத்தார் பூமியிலோ பொறந்திருக்க வேண்டும்!உணர்வுள்ள மக்கள்!மலையாளிகளுக்காக உண்மையாக அரசியல் செய்யும் அரசியல் தலைவர்கள்!

இங்கே அறுநூறு மீனவர்கள் நடுக்கடலில் கடலில் சுட்டுக் கொல்லப்பாட்டாலும்,எந்த நீதியும், நியாயமும் வழங்காது இந்திய மற்றும் தமிழ்நாட்டு நீதித்துறை!

ஆனால் சேட்டன்கள் பூமியில், இத்தாலியர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடும், குற்றம் இழைத்த இத்தாலி கடற்படையினருக்கு, கடுமையான சிறைத்தண்டனையும் வழங்கி இருக்கிறது இந்திய நீதித்துறை!

கொன்றவர்களை, தேர்தலில் வாக்கு செலுத்த இத்தாலி அனுப்பி வைத்த இந்திய அரசு, பின்பு அவர்களை இந்தியாவுக்கு திருப்ப அனுப்ப இயலாது என்ற இத்தாலியின் கோரிக்கையை நிராகரித்து,பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு அவர்களை இந்தியா அழைத்து வந்து சிறையில் அடைத்தது!

இதோ! அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று இந்திய குற்ற புலனாய்வு துறை பரிந்துரை செய்து இருக்கிறது! நடக்குதோ இல்லையோ அது ரெண்டாவது கதை. ஆனால் இது தான் சேட்டன்களின் அதிரடி! சேட்டன்களின் உணர்வு!

ஆயிரம் தான் இந்தியா இந்தியன் என்று இந்த தேசத்தில் எவன் கூவினாலும்,
கொல்லப்பட்டவன் மலையாளி என்றால் ஒட்டுமொத்த மலையாளிகளும், அரசியல்வாதிகளும் இந்திய அரசையே எதிர்த்து நின்று பாதிக்கப்பட்டவனுக்கு நியாயம் வாங்கி கொடுப்பார்கள்!

தமிழர்களுக்கோ தமிழ் மீனவனுக்கோ இது சாத்தியமா? என்ன காரணம்?

குற்றம் இழைத்த இத்தாலியர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பியாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த இந்திய அரசு, சென்னை கொலை வழக்கில் சிக்கி இருக்கும் டக்லஸ் தேவானந்தா இந்தியாவுக்கு ராஜ மரியாதையோடு வரும் போது பத்திரமாக திருப்பி அனுப்புகிறது!

கொல்லப்பட்ட அறுநூறு மீனவனுக்கும் இதுவரை என்ன நியாயம் கிடைத்து இருக்கிறது? என்ன நஷ்ட ஈட்டை வழங்கி இருக்கிறது?எந்த சிங்களவனையாவது சிறை படுத்தி இருக்கிறதா மத்திய மாநில அரசுகள்?காரணம் என்ன ?நாமெல்லாம் இழிச்சவாப் பயலுக!

இங்க இருக்குறவன்(தமிழ்நாட்டு அரசியல்வாதி) எல்லாம் ஒழுங்கா இருந்தா, சிரைக்கிறவன்(மத்திய அரசு) எல்லாம் ஒழுங்கா சிரைப்பான்!

ஒரு மீனவனின் வலி உணர்ந்தவனாக,பாதிக்கப்பட்ட மீனவனின் குடும்பத்துக்கு நியாமான நஷ்ட ஈட்டையும்,கடுமையான தண்டனையும் வாங்கி கொடுக்கும் சேட்டன்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக