புதன், 15 ஜனவரி, 2014

ஆம் ஆத்மிக்கு ஒரு சல்யூட்!
























சாமானியர்களின் இதயங்களில், நம்பிக்கை விதையை விதைத்த ஆம் ஆத்மிக்கு ஒரு சல்யூட்!

ஆம் ஆத்மி அதை செய்திடுமா, இதை செய்திடுமா ,அவிங்களும் எல்லா கட்சியப் போல தடம் மாற காலம் ஆகாது!

ராஜீவ் காந்தி வரும் போதும் மிஸ்டர் கிளீன் என்று தான் சொன்னார்கள்!மன்மோகன் சிங் வந்த போதும் இப்படித் தான் சொன்னார்கள்!அவர்களைப் போலவே கேஜ்ரிவால் கதையும் அப்படித் தான் முடியும் என்று பலர் ஆருடம் சொல்கிறார்கள்!

கேஜ்ரிவாலும் ஆம் ஆத்மி கட்சியும், மலையை பொறட்டி விடுவார்கள் என்றோ,நதிகளை இணைத்து விடுவார்கள் என்றோ டெல்லியை/இந்தியாவை ஐரோப்பிய அமெரிக்க மாகாண/நாடுகளுக்கு இணையாக மாற்றி விடுவார்கள் என்றோ நாம் சொல்ல வரவில்லை. அவர்கள் செயல்பாடுகள் நூறு சதவிகிதம் சரியாக இருக்கும் என்றோ,நூறு சதவிகிதம் தவறாக இருக்கும் என்றோ வாதிட வரவில்லை!

அவர்கள் செயல்பாடுகளை விமர்சிக்க, பழம் தின்னு கொட்டை போட்ட அரசியல் விமர்சகர்கள் எல்லாம்,கண் கொத்தி பாம்பாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு கால அவகாசம் கொடுக்க வேண்டும்! ஒருவரை தீர்மானிக்க,அவரது செயல்பாடுகளை எடை போட கால அவகாசம் கட்டாயம் வேண்டும்.

ஆட்சியைப் பிடித்த மூன்று நாளில் எதிர் விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் அவர்கள் செயல்பாடுகளைப் பார்த்த பிறகு,ஆட்சி குறித்த நிறை குறைகளை விமர்சனமாக வைப்பது சரியாக இருக்கும்! காரணம் அனைவரும் அரசியலுக்கு/அரசியல் பதவிகளுக்கு புதியவர்கள்.அதனால் கொஞ்சம் பொறுமை காக்கத் தான் வேண்டும்!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.கட்டாயம் இதுவரை இருந்த/இருக்கிற ஆட்சிகளில்/ஆட்சியாளர்களில் இருந்து ஒரு முற்றிலும் மாறுபட்ட ஆட்சியாக,ஆம் ஆத்மி இருக்க வேண்டும், கட்டாயம் இருக்கும் என்பது மாற்றத்தை விரும்பும்,சாமானிய மக்களின் வலுவான நம்பிக்கை!

காரணம் பதவி ஏற்று இருப்பவர்கள் மற்ற கட்சிகளைப் போல கட்டப் பஞ்சாயத்து அரசியல் பின்புலம் இல்லாதவர்கள், களவாணிகள் இல்லை, இடைத் தரகர்களாக இல்லை,அநியாயத்துக்கு சொத்து சேர்த்தவர்கள் இல்லை, கொலை கொள்ளைக் காரர்கள் இல்லை. மாறாக எளியவர்கள், படித்தவர்கள்,சாமனிய மக்கள்!

எனக்கு தற்போது கேஜ்ரிவாலின் செயல்பாடுகளை விட,

இங்கே மிக நீண்ட காலமாக

சாமானியன் எல்லாம் ஆட்சிக்கு வர முடியாது!
சாமானியன் எல்லாம் அரசியலுக்கு வர முடியாது!
அதை மீறி அரசியலுக்கு வந்தாலும் ஜெயிக்க முடியாது!
நாடும்,ஒட்டு மொத்த சமூகமும், கெட்டு போய் இருக்கு!
மக்கள்அனைவரும் சரி இல்லை!
மக்கள் காசுக்கு மட்டுமே ஒட்டு போடுகிறார்கள்!
நாடு முழுக்க ஊழல் மலிந்து கிடக்கு!
அரசியலில் தனி செல்வாக்கு இல்லாவிட்டால், வாய்ப்பே இல்லை!
அரசியல்வாதிகள் பிள்ளைகள் மட்டும் தான்,அரசியலுக்கு வர முடியும்!
கோடி,கோடியா பணம் இருக்குறவன்,கொள்ளை அடிக்கிறவன் தான் அரசியலுக்கு வர முடியும்!
அரசியல் புரியாத சின்னப் பசங்க,எதோ சிறு பிள்ளைத் தனமா மாற்றம் அது இதுன்னு பேசுறானுங்க!
நாங்க எல்லாம் அரசியலில்,இருபது வருஷம் முப்பது வருஷம் பழம் தின்னவங்க!

இப்படி திரும்புற பக்கம் எல்லாம் அவநம்பிக்கை வார்த்தைகளை மட்டுமே விதைத்து,அரசியல் என்றாலே பயம்,அது சாமானிய மக்களுக்கு சாத்தியப் படாத ஒன்று,படிச்சவனுக்கும், நியாயமா பேசுறவனுக்கும், செயல்படுபவனுக்கும்,மக்கள் நலன் சார்ந்து இயங்குபவனுக்கும், அரசியலில் வேலையே இல்லை என்று படித்தவர்களை பயமுறுத்திக் கொண்டு,அரசியலுக்கு வர விடாமல் தடுத்த அத்தனை அயோக்கியர்களுக்கெல்லாம் நடு மண்டையில நச்சுன்னு ஒரு அடி அடிச்சு!

இல்லை டா தம்பிகளா!

நீங்க சொன்னதெல்லாம் உண்மை தான்.ஆனால் அதெல்லாம் போன மாசம் என்று பேச வைத்தான் பாருங்க கேஜ்ரிவால்!

அந்த நம்பிக்கை விதையை சாமானிய மக்கள் மனதில் விதைத்தான் பாருங்கள்! அவன் விதைத்த அந்த நம்பிக்கை விதைக்காக ஆம் ஆத்மிக்கும்,கேஜ்ரிவாலுக்கும் ஒரு சல்யூட்!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக